Monday, January 16, 2012

உங்கள் குழந்தை பருமனாக (Obesity) இருக்க காரணம் என்ன? – ஆராய்ச்சி தகவல்

Late Sleeping

பெற்றோர்களே!! உங்களின் குழந்தை சீக்கிரமாக தூங்க செல்வதனால் அவர்கள் அதிக எடை (பருமன் ஆகாமல்) போடாமல், அவர்களை நல்ல உடல்வாகுடன் இருக்க காரணமாக அமைகிறது.
ஆராய்ச்சியாளர்கள் தங்களின் பணியில் 2,200 இளைஞர்களை (9 வயது முதல் 16 வயது வரை) ஆய்வுக்கு உட்படுத்தியதில், சீக்கரம் தூங்க செல்லும் பிள்ளைகளை காட்டிலும் தாமதமாக தூங்க செல்லும் பிள்ளைகள் 1.5 மடங்கு அதிக பருமனாக இருக்க அதிக வைப்பு இருப்பதாகவும் என்று “The Daily Express” இல் தெரிவித்துள்ளார்கள்.
ஆந்தை போல் இரவில் அதிக நேரம் விழித்திருக்கும் குழைந்தைகள் உடல் ரீதியாக செயல்படாதவர்களாக (Physically Inactive) மற்றும் அதிக நேரம் T.V முன் நேரத்தை செலவழிப்பதாக ஆராய்ச்சியில் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள்
Dr. Carol Maher (தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்) கூறுகையில் இரவில் தாமதமாக தூங்கும் குழந்தைகளும் மற்றும் விரைந்து தூங்கும் குழந்தையும் ஒரே கால அளவுதான் எடுத்துக் கொள்கிறார்கள்.
அவர் தொடர்ந்து கூறுகையில் “தாமதமாக தூங்கும் குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடுகள் பல ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. தூங்கும் நேரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது.”
எனவே! இந்த செய்தியை படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தூக்கத்தை அதன் உரிய நேரத்தில் செயல்படுத்துவது அவசியமாகிறது என்பதை உணர்வீர்கள்!
குறிப்பாக பெற்றோர்கள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்களின் குழந்தை குண்டாக போவதை கண்டு வருத்த படுவதை விட்டு! ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறு கல்விகளஞ்சியம் சார்பாக கேட்டுகொள்கிறோம்!!

No comments:

Post a Comment