Saturday, January 21, 2012

வாங்கய்யா படிக்கலாம்..! படிச்சா ஜெயிக்கலாம்..!!



அணு மருத்துவம் மற்றும் நியூக்கிளியர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் விவரம்:
தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி
எம்.டெக்., நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
ஐ.ஐ.டி., கான்பூர்
எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை.
பி.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங்
அமிட்டி பல்கலைக்கழகம், நொய்டா
பி.டெக்., எம்.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம்
யுனிவர்சிட்டி, காந்திநகர்
எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங்
ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்
எம்.எஸ்சி. நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி
எம்.எஸ்சி. நியூக்கிளியர் பிசிக்ஸ்
இமாசலப் பிரதேச  பல்கலைக்கழகம், சிம்லா
பி.டெக். நியூக்கிளியர் எனர்ஜி அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்
மணிப்பால் யுனிவர்சிட்டி, மணிப்பால்
பிஎஸ்சி நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி
எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி
எய்ம்ஸ், புதுடில்லி
எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி
எம்.டி. நியூக்கிளியர் மெடிசின்
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டீகர்
எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின்
சஞ்சய் காந்தி போஸ்ட்கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், லக்னோ.
எம்.டி. நியூக்கிளியர் மெடிசின்
பிஎச்.டி. நியூக்கிளியர் மெடிசின்
சகா இன்ஸ்டிட்யூட் ஆப் நியூக்கிளியர் பிசிக்ஸ், கொல்கத்தா.
போஸ்ட் எம்.எஸ்சி. அசோஷியேட்ஷிப்
டாக்டர்  ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட், மும்பை
ஒருங்கிணைந்த பிஎச்.டி.
டிப்ளமோ இன் மெடிக்கல் ரேடியோஐசோடோப் டெக்னிக்ஸ்
டிப்ளமோ இன் ரேடியேஷன் மெடிசின்
இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசிக்ஸ், புவனேஸ்வரம்
பிஎச்.டி.
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சென்னை
போஸ்ட்கிராஜுவேட் டிப்ளமோ -நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி
சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங்

இந்தப் படிப்பில்  சேர எவ்வளவு மதிப்பெண்கள் தேவை. இதற்கு நுழைவுத் தேர்வு இருக்கிறதா? இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் கூறவும்.
வ.பாலாஜி, வ.களத்தூர், பெரம்பலூர் மாவட்டம்
பி.ஆர்க். படிப்புகளைக் கற்றுத்தர தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா திறனறித் தேர்வை (NATA) எழுதி இருக்க வேண்டும். இதில் டிராயிங் டெஸ்ட், ஏஸ்தெட்டிக் சென்ஸ்ஸிட்டிவிட்டி டெஸ்ட் ஆகிய இரண்டு தாள்கள் உள்ளன.  நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200க்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பது கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின்கீழ் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். எனவேபிளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் வேண்டும்.

த்துடன் நேட்டா நுழைவுத் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் வேண்டும். அப்போதுதான் நீங்கள் விரும்பும் நல்ல கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்பில் இடம் கிடைக்கும். என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க். படிப்புகளில் சேர அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வில் (AIEEE)இரண்டாம் தாளை எழுத வேண்டும். அந்த நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைப்பதைப் பொருத்து என்ஐடிக்களில் பி.ஆர்க். படிப்பில் சேர முடியும்

பி.எட். நுழைவுத் தேர்வு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட் படிக்க விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்ற பள்ளி ஆசிரியர்கள்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தாவரவியல், விலங்கியல், எலெக்ட்ரிக்கல், இயற்பியல், வேதியியல், பயோ-கெமிஸ்ட்ரி, பிளாண்ட் பயாலஜி, ஹோம்சயின்ஸ், ஜியோ பிசிக்ஸ் போன்ற பாடங்களை எடுத்துப் படித்து இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 10.02.2012
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 22.04.2012
விவரங்களுக்கு: www.mkudde.org

பாரதியார் பல்கலைக்கழகம்
கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். இளநிலைப் பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கம்ப்யூட்டர் அறிவியல் போன்ற பாடங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பில் பொருளாதாரம், வணிகவியலை பிரதானப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் ஆசிரியர்களாகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தும் பி.எட். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

பி.எட். படிப்புக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்  விளக்க அறிக்கையை, பல்கலைக்கழகத்திலிருந்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெறலாம். ரூ.500-க்கான டி.டி.யை ’The Director,  School  Of  Distance  Education,  Coimbatore’  என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி தேதி: 28.02.2012
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 25.03.2012
விவரங்களுக்கு: www.b-u.ac.in

AIPVT நுழைவுத் தேர்வு
ஜி. மீனாட்சி
நாடு முழுவதிலும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள், அகில இந்திய அளவில் நடைபெறும் கால்நடை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை (AIPVT) எழுத வேண்டும். வெட்டினரி கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது. நாடு முழுவதிலும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகியவற்றை பாடமாக எடுத்துப் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது: 2012, டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, 17 வயதுடையவர்களாக இருக்கவேண்டும்.

தேர்வு எப்படியிருக்கும்?: மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். ஆங்கிலத்தில் அப்ஜெக்டிவ் முறையில் தேர்வு இருக்கும். 200 கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறும். இயற்பியல் பாடத்துக்கு 60 மதிப்பெண்கள், வேதியியல் பாடத்துக்கு 60 மதிப்பெண்கள், உயிரியலுக்கு 80 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தேர்வு நடைபெறும் மையங்கள்: அகர்தலா, அகமதாபாத், அய்சாவல், பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி, குவாஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஈட்டாநகர், ஜெய்ப்பூர், கோஹிமா, கொல்கத்தா, லட்சத்தீவுகள், லக்னோ, மும்பை, நாக்பூர், பானாஜி, பாட்னா, போர்ட்பிளேர், புதுச்சேரி, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, திருவனந்தபுரம்.

எந்தெந்தக் கல்லூரிகளில் சேர முடியும்?:  AIPVT தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள், சென்னை, நாமக்கல், மும்பை, பார்பானி, திருச்சூர், பாலம்பூர், ஜபல்பூர், மதுரா, புவனேஸ்வரம், சர்தார்க்ருஷிநகர், குஜராத் மாநிலம் ஆனந்த், ஃபைசாபாத், பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி, மிசோராம், நாக்பூர், கொல்கத்தா போன்ற இடங்களில் உள்ள அரசு  கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் அறிக்கையை  நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெறலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.1,250-க்கான வங்கி வரைவோலையை Veterinary Council of India – Examination Fund’ Payable at New Delhi’ என்ற பெயரில் எடுத்து Controller of Examination, Veterinary Council of India, ‘A’ Wing,2nd Floor,  August Kranti Bhawan,  Bhikaji Cama Place, New Delhi - 110 066 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை நேரடியாகப் பெற விரும்புபவர்கள், ரூ.1200-க்கான டிமாண்ட் டிராப்ட்டை மேற்கூறிய அதே பெயரில் எடுக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ரூ.600-க்கான டிமாண்ட் டிராப்ட்டை எடுத்தால் போதுமானது.

விண்ணப்பங்களும் தகவல் அறிக்கையும் விநியோகிக்கப்படும் நாள்: 09.01.2012 முதல் 10.02.2012 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.02.2012
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 12.05.2012
விவரங்களுக்கு:  www.vci-india.in

குறுகிய கால தொழில் பயிற்சிகள்
சென்னை கிண்டியிலுள்ள மத்திய அரசு நிறுவனமான, அட்வான்ஸ்ட் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பொறியியல் அல்லது பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் அல்லது பி.எஸ்சி. இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி படித்தவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேரலாம். ஐ.டி.ஐ. படித்தவர்களும் இப்பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் சேர வயது வரம்பில்லை.

இந்தப் பயிற்சி குறித்த விவரங்கள்: ஹைட்ராலிக் மற்றும் நியூமாட்டிக் கண்ட்ரோல்ஸ் பிரிவில் நான்கு வகையான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் இரண்டு வாரம் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

எலெக்ட்ரிக்கல் கண்ட்ரோல் பிரிவில் நான்கு சிறப்புப் பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன. பயிற்சிக் காலம் - ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை.  எலெக்ட்ரானிக்ஸ் கண்ட்ரோல்ஸ் அண்ட் மெயின்டனென்ஸ் பிரிவில் ஏழு சிறப்புப் பயிற்சிகள் உள்ளன. பயிற்சிக் காலம் - மூன்று மாதங்கள்.

பிராசஸ் கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 9 வகையான பயிற்சிகள் உள்ளன. பயிற்சிக் காலம் - இரண்டு மாதங்கள். சி.என்.சி. சென்டர் பிரிவில் மூன்று சிறப்புப் பயிற்சிகள் உள்ளன. பயிற்சிக் காலம் - ஒன்றரை மாதங்கள்.

வாகனத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்காக ஹீட் என்ஜின் பிரிவில் வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு போன்றவை கற்றுத் தரப்படும். பயிற்சிக் காலம் - ஏழு வாரங்கள்.

இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி பிரிவில் மூன்று வகையான பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிக் காலம் - 3 வாரங்கள். புரடக்ஷன் டெக்னாலஜி பிரிவில் மூன்று வகையான பயிற்சிகள் உள்ளன. உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். இப்படிப்புக்கு தொழிற்சாலைகளில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சிக் காலம் - ஒன்றரை மாதங்கள்.

எடை அளவுகள் ஆய்வில் (Metrology)  5 வகையான பயிற்சிகள் உள்ளன. பயிற்சிக் காலம் - ஒன்றரை மாதங்கள். இயந்திரங்கள் பராமரிப்பு சம்பந்தப்பட்ட மெஷின் டூல் மெயின்டனென்ஸ் பிரிவில் நான்கு வகையான பயிற்சிகள் உள்ளன. பயிற்சிக் காலம் - 7 வாரங்கள். அட்வான்ஸ்ட் வெல்டிங் பிரிவில் ஐந்து வகையான பயிற்சிகள் இருக்கின்றன. பயிற்சிக் காலம் - இரண்டு மாதங்கள்.

இந்தப் பயிற்சிகளுக்கு ஒரு வாரத்திற்கு ரூ.350 முதல் 2,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சிகளுக்கேற்ப கட்டணமும் மாறுபடும். விண்ணப்பத்திற்கும், பதிவு செய்வதற்கும் ரூபாய் 100-ஐ போஸ்டல் ஆர்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம் அனுப்ப வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்க விரும்புபவர்களுக்கு, ஒரு நாள் விடுதிக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிகள் 26.03.2012ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
விவரங்களுக்கு:
இயக்குநர்,
அட்வான்ஸ்ட் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்,
சி.டி.ஐ. வளாகம், கிண்டி, சென்னை - 600032
தொலைபேசி எண்: 044- 22500252
இணையதள முகவரி: http:atichennai.org.in

No comments:

Post a Comment