Friday, January 6, 2012

9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல்

Sleepingகுழந்தைகள் 9 மணிநேர இரவு தூக்கமின்மையால் பல பின் விளைவுகள் ஏற்படுகிறது என்று ஒரு புதிய அராய்ச்சி கூறிகிறது. அவைகளில் மோசமான தொடர்பு திறன்கள், அடிப்படை கணக்கு போடுவதில் சிரமம் போன்ற விளைவுகள் ஏற்படுகிறது!!
“Autonomous University of Barcelona – Spain” உள்ள ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகள் போதுமான தூக்கம் இல்லாமல் - “சரிவர மக்களை தொடர்பு இல்லாமலும் கணக்கு படத்தில் ஆர்வம் இல்லாமலும் இருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்கள்.
இந்த ஆராச்சியின் தலைவரான “Ramon Cladellas” கூறுகையில் “அறிவுசார் வளர்ச்சி தேவையான தூக்கம் பெருபாலான குழந்தைகளிடம் இல்லாததால் அதில் இருந்து மீள்வது கடினமாகும்!”
மேலும் தொடர்ந்து கூறுகையில் “மாணவர்கள் 11 மணிநேர தூங்குபவர்களை காட்டிலும் 9 மணிநேர தூங்குபவர்கள் குறைந்த செயல்திறன் உடையவர்களாய் இருக்கிறார்கள்”.
இந்த ஆய்விற்காக, ஆர்சியாளர்கள் 142 முதல்நிலை மாணவர்கள் (ஆறு முதல் எழு வயதிற்கு உட்பட்டவர்கள்) சோதனைக்கு உட்படுத்தபட்டார்கள். இவர்களின் தூங்கும் நேரத்தையும், அவர்களின் கல்வி திறன்கள் ஒப்பிட்டு பார்த்தார்கள்.
மோசமான தொடர்பு திறன் மற்றும் கணக்கு திறன் அல்லாமல், மாணவர்கள் எழுத்து பிழைகள், இலக்கணன் மற்றும் comprehension எனப்படும் அறியும் திறன் போன்ற திறன்களில் குறைப்பாட்டால் அவதிபடுகிறார்கள்
இருப்பினும், மாணவர்களின் நினைவு திறன் மற்றும் கற்கும் திறன் போதுமான தூக்கமின்மையால் அதிகம் பாதிக்க வில்லை.  அதிக நேரம் TV பார்ப்பது,  Computer விளையாட்டு போன்றவைகளால் இவர்களின் கல்வி திறன் குறைய காரணமாகிறது.
“இன்றயசூழ்நிலையில், குழந்தைகள் தொலைக்காட்சி, Computer மற்றும் Video விளையாட்டுகளில் அடிமைகளாக இருக்கிறார்கள், அனால் இவர்கள் இதற்கு காட்டும் முக்கியத்துவத்தை தங்களின் தூகதிரக்கு காட்டுவதில்லை.
இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிம்மதியான தூக்கம் அமைய உதவுவதோடு டிவி, கம்ப்யூட்டர் விளையாட்டு (Computer Games) போன்றைவைகளுக்கும் உங்கள் குழந்தைகள் அடிமையாகி விடாமல் கவனம் செலுத்த வேண்டும்.
அறிவிக்கு வேலை தரக்கூடிய விளையாட்டை உங்கள் குழந்தைகளுக்கு ஊக்கப்படுத்துவது சிறந்தது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நன்மைகளை மனதில் கொண்டு டிவி, சீரியல் போன்ற போதைகளிலிருந்து வெளியேற வேண்டும்.
உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு என்றும் துணையாக,
கல்வி களஞ்சியம்

No comments:

Post a Comment