Monday, January 16, 2012

பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் - BITSAT நுழைவுத் தேர்வு..!



 நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொறியியல் கல்வி நிறுவனமான பிட்ஸ் என்று அழைக்கப்படும் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தில் ஒருங்கிணைந்த பல்வேறு படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ்டூ மாணவர்கள் பிட்சாட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் பிலானியில் உள்ள பிட்ஸ் என்று அழைக்கப்படும் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி. இதற்கு கோவாவிலும் ஹைதராபத்திலும் வளாகங்கள் இருக்கின்றன. நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இயங்கும் இந்தக் கல்வி நிறுவனத்தில் படித்து வெளியேறும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைத்து வரும் நல்ல வேலைகளே இந்தக் கல்வி நிறுவனத்தின் பெருமையை பறைசாற்றும்.

இங்குள்ள படிப்புகளில் சேர என்ன தகுதி இருக்க வேண்டும்?
இந்தக் கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த படிப்புகளில் பிளஸ் டூ மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுளில் சேர்த்து சராசரியாக 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம். நல்ல ஆங்கில மொழி அறிவும் முக்கியம். இந்த ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் 2011ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களும், இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தேர்வுகளை எழுதியிருந்தால், மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். பிளஸ் டூ தேர்வில் 2010ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்போ தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இங்கு அட்மிஷன் பெற விண்ணப்பிக்க முடியாது. ஏற்கெனவே பிட்ஸ் கல்வி நிலையத்தில் படித்து வரும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

2012ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசு போர்டுகள் நடத்தும் பிளஸ் டூ தேர்வில் முதல் ரேங்க்குகளைப் பெறும் மாணவர்கள் இங்கு நேரடியாக அவர்கள் விரும்பும் படிப்பில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்த விவரங்கள் பிட்ஸ் இணையதளத்தில் மே மாதம் விரிவாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு எப்படி இருக்கும்?
பிட்சாட் நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டபடி 11, 12ஆம் வகுப்பு பாடங்களிலிருந்து நுழைவுத் தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். மூன்று மணி @நரத் தேர்வு இது. ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் இருக்கும். இயற்பியல், வேதியியல், கணிதம், இங்லீஷ் புரபிசியன்சி, லாஜிக்கல் ரீசனிங் ஆகிய பாடப்பிரிவுகளில் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் இருக்கும். வேதியியல் மற்றும் இயற்பியலில் தலா 40 கேள்விகளும் கணிதத்தில் 45 கேள்விகளும் இங்கிலீஷ் புரபிசியன்சியில் 15 கேள்விகளும் லாஜிக்கல் ரீசனிங்கில் 10 கேள்விகளும் மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். கொடுக்கப்பட்ட விடைகளில் சரியான விடைகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

கொடுக்கப்பட்ட 150 கேள்விகளுக்கும் விடையளித்த பிறகு நேரம் இருந்தால், மாணவர்கள் கூடுதலாக 12 கேள்விகளுக்கு விடையளிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும். யூகத்தின் அடிப்படையில் இத்தேர்வை எழுத முயற்சிக்கக் கூடாது. ஆன்லைன் தேர்வு முடிந்ததும் மாணவர்கள் எழுதிய விடைகளில் எத்தனை விடைகள் சரியானவை, எத்தனை விடைகள் தவறானவை, எவ்வளவு மதிப்பெண்கள் என்பதை கம்ப்யூட்டர் காட்டி விடும். பிட்சாட் நுழைவுத் தேர்வு இணையதளத்தில், மாணவர்கள் ஆன்லைன் மூலம் மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்துக் கொள்ளவும் வசதிகள் உள்ளன.

சென்னை, கோவை, பிலானி, அகமதாபாத், சண்டீகர், தில்லி, ஹைதராபாத், லக்னோ, நொய்டா, குவாஹாத்தி, ரூர்க்கி, சூரத், கோவா, பெங்களூரு, குர்காவன், இந்தூர், மும்பை, விசாகப்பட்டினம், வாரணாசி, திருவனந்தபுரம், புனே, புவனேஸ்வரம், குவாலியர், கொல்கத்தா, நாக்பூர், விஜயவாடா, பாட்னா, ஹூப்ளி, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். பிட்ஸ் துபாய் வளாகத்திலும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் நுழைவுத் தேர்வு மே 10ம் தேதியிலிருந்து ஜூன் 9ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
பிட்சாட் இணையதளத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து ஆன்லைன் மூலம் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட்டை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். டிமாண்ட் டிராப்ட் எடுப்பதாக இருந்தால், விண்ணப்பக் கட்டணம் ரூ.1,700. மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,200. டிமாண்ட் டிராப்ட்டுடன் விண்ணப்ப நகலையும் இணைத்து பிட்ஸ் - பிலானி அட்மிஷன் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த விரும்பும் மாணவர்கள் ரூ.1,600 செலுத்தினால் போதும். அதுபோன்ற மாணவிகள் ரூ.1,100 செலுத்தினால் போதும். துபாய் மையத்தில் நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு கட்டணம் தனி.

பிட்சாட் நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கட்டணத்துடன் பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிராண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்ப நகலை பிலானியில் உள்ள பிட்ஸ் அட்மிஷன் அலுவலகத்தில் பிப்ரவரி 15ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். பிட்ஸ் கல்வி நிலையத்தில் படிக்க விரும்பும் பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்கு: www.bitsadmission.com

பிலானி வளாகம்:
பி.இ. ஆனர்ஸ்: கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், மெக்கானிக்கல், மானுபாக்ச்சரிங். பி.பார்ம் ஆனர்ஸ் எம்.எஸ்சி. ஆனர்ஸ்: பயாலஜிக்கல் சயின்சஸ், கெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், கணிதம், இயற்பியல். எம்.எஸ்சி. டெக்: ஜெனரல் ஸ்டடீஸ், ஃபைனான்ஸ், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்.

கோவா வளாகம்:
பி.இ. ஆனர்ஸ்: கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல். எம்.எஸ்சி. ஆனர்ஸ்: பயாலஜிக்கல் சயின்சஸ், கெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், கணிதம், இயற்பியல் எம்.எஸ்சி. டெக்: இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்

ஹைதராபாத் வளாகம்:
பி.இ. ஆனர்ஸ்: கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல். பி.பார்ம் ஆனர்ஸ் எம்.எஸ்சி. ஆனர்ஸ்: பயாலஜிக்கல் சயின்சஸ், கெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், கணிதம், இயற்பியல் எம்.எஸ்சி. டெக்: இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்.

நன்றி: 
பொன்.தனசேகரன்
தகவல்:ASHRAF                                                                                                                                           http://adiraimujeeb.blogspot.com/2012/01/bitsat.html  

No comments:

Post a Comment