Tuesday, January 17, 2012

முறையான வியாபாரம்


    ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே உங்களில் ஒருவருக் கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தம் அல்லாமல் ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.(4:29)
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் (2:275)
.அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் (2:275)
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் (2:282)
மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக, ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிறைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். (55:7-9)
வட்டி உண்பவரையும், உண்ணக் கொடுப்பவரையும் அதற்கு சாட்சிகளாக இருப்பவரையும் அதை எழுதக் கூடியவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (ஹாகிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா : இப்னு மஸ்ஊத்(ரலி))
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களைப் பரிசுத்தப் படுத்த மாட்டான் அவர்களுக்கு கடுமையான தட்டணையுண்டு என்று நபி(ஸல்) கூறினார்கள்.
“அவர்கள் நஷ்டம் அடைந்தவர்கள், அவர்கள் யார், யார்? என்று நான் கேட்டதும்”
1. செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டுபவன்
2. (பெருமைக்காக) தனது வேட்டியைத் தரையில் படுமாறு அணிபவன்.
3. தனது சரக்குகளைப் பொய்ச் சத்தியம் செய்து விற்றவன்.

என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள் (முஸ்லிம், திர்மிதி : அபூதர்(ரலி))
நபி(ஸல்) அவர்கள் ஏமாற்றும் வகையிலான வியாபாரத்தையும், கற்களைச் சுண்டி விட்டு அது எவ்வளவு தொலைவில் விழுகின்றதோ அவ்வளவு நிலத்தை விற்பனை செய்வதையும் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
விற்ற பிறகு தெரிய வரும் குறைபாடுகளுக்கு (விற்றவர்) பொறுப்பேற்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறியதாக ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
(எடை என்று இங்கு குறிப்பிடுவது. நிறுத்தல், அளத்தல், எண்ணிக்கை, ஆகியவற்றின் பொதுச் சொல்லாக கருதப்படல் வேண்டும்)
நான் நபி(ஸல்)அவர்களுடன் முஸல்லா என்ற இடத்திற்கு சென்றேன். அப்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்ததை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் வியாபாரிகள் சமுதாயமே அல்லாஹ்வின் தூதரின் கூற்றை கேளுங்கள் என்று கூறினார்கள். வியாபாரிகள் உடனே தங்கள் தலையையும் பார்வையையும் நபி(ஸல்)அவர்களை நோக்கி திருப்பினார்கள். நபி(ஸல்) அவர்கள், இறைவனi அஞ்சி உண்மை கூறி நல்ல முறையில் நடந்து கொண்ட வியாபாரிகளை தவிர மற்றவர்கள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். (இப்னுமாஜா : ரிஃபாஆ(ரலி))
நபி(ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலுக்கருகே சென்றார்கள். தமது கையை அந்த குவியலில் விட்ட போது விரல்களில் ஈரம் பட்டது அப்போது உணவு வியாபாரியே இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கவர் “அல்லாஹ்வின் தூதரே மழையில் நனைந்துவிட்டது என்றார்” மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியல் பார் மோசடி செய்கிறாரோ அவர்க நம்மைச் சார்ந்தவரல்லர் எனவும் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி : அபூஹுரைரா(ரலி)

No comments:

Post a Comment