Thursday, August 23, 2012

சமுதாயத்தின் வலிமையை நிலைநாட்டும் கூட்டுத் தொழுகை

வல்ல இறைவன் அல்லாஹ் தன் அடியார் மீது கடமையாக்கி இருக்கின்ற வணக்கவழிபாடுகளிலெல்லாம் தலையாய வழிபாடு தொழுகை என்னும் வழிபாடாகும், தன்னுடைய எல்லாப் புலன்களையும் ஒருங்கிணைத்து ஒரு இறை நம்பிக்கையாளன் செய்யக்கூடிய இந்த வணக்கம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயலாகும், இந்த தொழுகை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட பின் ஒரு அடியான் நிறைவேற்ற வேண்டிய முதல் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் நூற்றுக் கணக்கான வசனங்களில் தொழுகையைப் பற்றி வலியுறுத்துகிறான்.
“தொழுகையை நிலைநாட்டுங்கள், ஸகாத்தை கொடுங்கள், குனிந்து ருகூவு செய்து வணங்குவோருடன் நீங்களும் வணங்குங்கள் (அல்குர்ஆன் 2:43)
ஒரு நாள் ஒன்றிக்கு ஐங்காலத் தொழுகையை நிலை நாட்டுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் நிறைவேற்ற வேண்டிய கடமையாக தொழுகை உள்ளது. இந்த தொழுகையைப் பற்றித்தான் மறுமையில் முதலாவதாக கேள்வி கேட்கப்படும், அதற்கு சரியான பதில் சொல்லக்கூடியவன் மட்டுமே அடுத்த கட்டங்களை இலேசாக கடந்து செல்ல முடியும்.
மறுமையில் ஒரு அடியான் முதல் முதலாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித்தான் அதில் யார் சரியான பதிலை சொல்லி விடுகிறாரோ அதற்கு பின்னாலுள்ள விஷயங்களெல்லாம் இலேசாக ஆகிவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வணக்கத்தைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. காரணம் சமூகக் கூட்டமைப்பு அன்றாடம் நிலை நாட்டப்பட்டுக் கொண்டே இருப்பதற்கு பொருத்தமான ஒரு வணக்கமாக இந்த கூட்டு வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
தொழுகையை பள்ளிவாசல்களில் கூட்டாக நிலை நாட்டுவது இஸ்லாமிய சின்னங்களில் மிக முக்கிய மானதாகும். பள்ளிவாசல்களிலிருந்து நாளொன்றிற்கு ஐந்து நேரம் விடுக்கப்படுகின்ற பாங்கு என்னும் அழைப்பு, முஸ்லிம்கள் எல்லோரும் விரைந்து வந்து கூட்டாக தொழுகையை நிலைநாட்டவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்படும் அழைப்பாகும். எந்த ஒரு மதத்திலும் எந்த ஒரு கொள்கை கோட்பாட்டிலும் காணப்படாத மிக அற்புதமான ஒரு எழுச்சிக் குரலாக பாங்கு என்னும் அழைப்பு அமைந்துள்ளது. பாங்கு சப்தத்தை செவியுற்ற பின்பும் பள்ளிவாசலுக்கு வந்து கூட்டாகத் தொழுவதற்குரிய எல்லாவாய்ப்புகளும் இருந்தும், கூட்டுத் தொழுகையில் பங்கு பெறாமல் உதாசீனப்படுத்தக்கூடியவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
“யார் பாங்கு சப்தத்தைக் கேட்ட பின்பும் கூட்டுத் தொழுகையில் பங்கு பெறாமல் தங்கள் இல்லத்தில் இருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்கள் மீது அவர்களின் வீடுகளை எரித்து விட வேண்டும் என்று நான் நினைத்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : புகாரி, முஸ்லிம்
“தொழுகைக்கான அழைப்பை செவியேற்ற பின்பும் கூட்டுத் தொழுகையில் பங்கு பெறாமலிருப்பதற்கு பார்வை இழந்தவருக்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை. கண் தெரியாத நபித்தோழர் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து, எனக்கு பார்வை இல்லை, என்னை பள்ளிவாசலுக்கு அழைத்து வருவதற்கு யாரும் இல்லை, எனவே எனக்கு என் இல்லத்திலேயே தொழுகையை நிறைவேற்ற அனுமதி தாருங்கள் என்று கேட்ட போது, அனுமதி வழங்கவில்லை, பாங்கு சப்தத்தை செவியேற்றால் பள்ளிக்கு வந்தாக வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். நூல் : முஸ்லிம்
 உறுதியற்ற கொள்கையுடையவர்கள், நயவஞ்சகர்களுக்குத்தான் கூட்டுத் தொழுகை மிகவும் பாரமானதாக இருக்கும். “நயவஞ்சகர்கள் மீது மிகவும் பாரமான தொழுகை இஷா தொழுகையும், பஜ்ர் தொழுகையுமாகும். அந்த இரண்டு தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை உங்களில் ஒருவர் அறிவாரானால் நடக்க முடியாத நிலையிலும் சிரமப்பட்டாவது பள்ளிக்கு வந்துவிடுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய சின்னம் முஸ்லிம்களாலேயே பேணப்படாமலும், மதிக்கப்படாமலும் இருந்து வருகிறது. இஸ்லாமிய சமுதாயம் தொழுகையை நிறைவேற்றுவதிலே, அதிலும் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுவதிலே மிகவும் பின் தங்கி இருக்கிறது. தொழுகை இஸ்லாமின் மிக முக்கியமான ஒரு கடமை என்பதைக் கூட நிறைய முஸ்லிம்கள் புரியாமல் இருக்கிறார்கள். இதன் காரணத்தினால் சமுதாயம் மிகப்பெரிய சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது.




அனைத்து முஸ்லிம்களும் ஐங்காலத் தொழுகைகளை முறையாக அல்லாஹ்வுடைய பள்ளி வாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவார்களானால் நிச்சயம் இந்த சமுதாயம் மேன்மை மிக்க சமுதாயமாகவும், வலிமை மிக்க சமுதாயமாகவும் மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. வலுவான சமுதாயக் கூட்டமைப்புத் தேவை என ஆசைப்படும் சமுதாய இளைஞர்கள், சமூகப் பிரமுகர்கள் இஸ்லாத்தின் மிகப்பெரும் சின்னமாக விளங்குகின்ற கூட்டுத் தொழு கையை நிலைநாட்ட அயராது பாடுபடுவது அவசியமாகும்.

பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?

Post image for பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?


பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் வேறு எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும்.
அவர்கள் படிக்கும்  நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா தீய இடங்களுக்கு செல்கின்றனரா புகை பிடித்தல் பழக்கம் உள்ளனவா என அவர்கள் அறியாத வண்ணம் கண்கானித்து பிள்ளைகளிடம் மென்மையான முறையில் தீய பழக்கத்தின் கெடுதிகளை உணர்த்தி நேர் வழியின் பக்கம் கொண்டு வரவேண்டும்.
எனவே தான் நபி ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி)
பிள்ளைகள் படிப்பதற்காக தேர்ந்தெடுக்கும் நூல்கள் அவர்களது அறிவைப் பெருக்கும் நூல்களா அல்லது சினிமா அல்லது ஆபாசம் கலந்த கதைகளை படிக்கின்றனரா எனவும் கண்கானிக்க வேண்டும்.   சில நூல்கள் அறிவை அழித்து நற்பண்புகளை சிதைக்கக்கூடியதான நூல்களை படிப்பதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
அவர்களது பழக்க வழக்கங்கள் பொழுது போக்குகள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.  நன்பர்கள் நன்மையின் பக்கம் செல்பவர்களாகவும் தீமையை வெறுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எத்தனையோ நன்பர்களின் நட்பு அவர்களை தீமையின் பக்கம் சென்று வழி தவறிவிடுகிறார்கள்.  இதனை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்கள் அலட்சியத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
பெற்றோர்கள் அவசியம் ஏற்படும்பொழுது அந்தப் பிள்ளைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்கானித்து அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின் ரகசியத்தையும் இந்த விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்த பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நன்மை செய்தவர்களாகவும், இவ்வாறு பொருப்பை உணராமல் அந்த கடமையைப் பாழாக்கியவர்களின் பிள்ளைகள் சமுதாயத்திற்கு கேடாக அமைந்து இவ்வுலகிலும் மறு உலகிலும் துன்பமே அடைவார்கள்.
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.  (அல்குர்ஆன் 8:28)
பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து  பிள்ளைகளை வளர்ப்பதில் தங்கள் கடமைகளை பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினால் அந்தப் பிள்ளைகள் ஒரு போதும் அவர்களுக்கு எதிரியாக மாட்டார்கள்.

ஓமன் நாட்டில் தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பிணம் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்

பிணம் தோண்டி எடுக்கப்பட்டது(மண்ணறை வேதனை)
இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.


இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.


உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை.


3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.


சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.


அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.



இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.

புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.

உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்..


திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.


அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.


"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))


"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர்.

அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.

பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான்.

அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?


ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.


அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.


ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.



நன்றி Mohammedislam Islam

தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்!



தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்!

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.

தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.இதற்கான முழுப்ப
ொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கானகாரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்,
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன SMS வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்,
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

''இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆண்: 24:37)

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு(அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டாம்.

7. தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை,
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.
-

Wednesday, August 8, 2012

நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – இஸ்லாமியத் தீர்வு என்ன?

இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை.

இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை.

இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.

நமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.                     திருமணம் - தவிர்க்கக் கூடாத நடை முறை.                                                    உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் (24 : 32))

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். (நூல் புகாரி (5066))

மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். (நூல் - புகாரி 5063)

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.(அல்குர்ஆன் (13 : 38))

மேற்கண்ட நபி மொழிகளும், திருமறை வசனங்களும் திருமணம் என்பது யாரும் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒரு செயல்பாடாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதை தெளிவாக உணர்த்துகின்றன.

நிச்சயிக்கப்படும் திருமணங்களும், கொச்சைப்படுத்தப்படும் இஸ்லாமிய குடும்பவியலும்.

இன்று நமக்கு மத்தியில் நடத்தப்படுகின்ற பல திருமணங்கள் வருடக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் செய்யப்படுகிறது.

ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அல்லது மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போது திருமணத்திற்கான தேதியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் சில இடங்களில் ஐந்து வருடம் வரை தள்ளி வைத்து விடுவார்கள் கேட்டால் நாங்கள் பேசி வைத்திருக்கிறோம் என்பார்கள்.

திருமணத்திற்கு பிறகு தான் கணவன், மணைவி பந்தம்.

ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். (புகாரி- 5141)

எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)

எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

ஆண், பெண் தனிமை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம் 2611)

தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் தொலை பேசி உரையாடலும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு எந்த விதமான அனுமதியும் இல்லை.

இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரும்ணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே குடும்ப வாழ்வில் ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.

அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அல்லது சந்தேகம் ஏற்படும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம்.

தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்

தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி 6612)

நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது நடை முறைப்படுத்தப்படுவதில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.

பெண் பேசி வைக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் குறைய வேண்டுமானால் நபியவர்களின் வழிகாட்டுதலைப் போல் பெண் பேசினால் திருமணத்தை செய்து விடுவதுதான் சிறந்த நடை முறையாகும். காலம் தாழ்த்தும் போது நாம் ஏற்கனவே சொன்னதைப் போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்படுவது மட்டுமன்றி பெண் பிள்ளையும் அவள் தரப்பும் கடுமையான முறையில் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

இறுதியாக…………………

அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே! இஸ்லாம் காட்டிய வழியில் நமது திருமணங்களை உடனுக்குடன் நாம் அமைத்துக் கொண்டால் நமது வாழ்வில் ஏற்படும் பல சிக்கள்களுக்கும் தீர்வாக அது அமைந்து விடும் என்பதை மனதில் நிறுத்தி இஸ்லாமியக் குடும்பவியலைச் சரியான முறையில் புரிந்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக!

ஆடை அணிவதன் ஒழுக்கங்கள்

ஆடை அணிவதில் இஸ்லாம் சில ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தந்திருக்கின்றது. அவற்றை இப்போது பார்ப்போம்.  

1. மர்ம உறுப்பை மறைக்கும் படி ஆடை அணியவேண்டும்

"எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும்; எவற்றை மறைக்காமல் இருக்கலாம்''  என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் மனைவி, உன் அடிமைப் பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்'' என்று விடையளித்தார்கள். "ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பைக் காத்து கொள்ள வேண்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்'' என்று விடையளித்தார்கள். இதை முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல்: திர்மிதி 2693, 3718

2. ஒரு ஆடையில் இருவர் படுக்கக் கூடாது

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல்: திர்மிதி 2717, அபூதாவூத் 3502

3. வலது புறமாக ஆரம்பம் செய்ய வேண்டும்
 
நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்வார்கள்.  நூல்: திர்மிதி 1688


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் உளூச் செய்யும் போதும் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.  நூல்: அபூதாவூத் 3612
 
4. பெருமைக்காக ஆடையை தரையில் படுமாறு நடக்கக் கூடாது


நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகில் புகுவார்.  நூல்: புகாரி 5787

அபூதர் (ரலி) கூறியதாவது: "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை கணுக் கால்களுக்குக் கீழ் இறக்கிக் கட்டியவர், செய்த உபகாரத்தைச் சொல்லி காட்டுபவர், பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்''  என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.  நூல்: முஸ்லிம் 171

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முற்காலத்தில் ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் இழுத்துக் கொண்டே நடந்த போது அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்.  நூல்: புகாரி 3485


இது போன்ற செய்திகளை முன் வைத்து கரண்டைக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது; அப்படி அணிகிறவர் நரகில் புகுவார் என்று கூறுகின்றனர். இப்படி மட்டும் செய்தி இருந்தால் இவர்கள் சொன்ன கருத்து சரி என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற மற்ற செய்திகளைப் பார்க்கும் போது,  பொத்தாம் பொதுவாக இப்படிச் செய்கிறவர் நரகில் புகுவார் என்று சொல்லவில்லை. மாறாக பெருமைக்காக இப்படி அணிந்தால் நரகம் என்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக இருக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது ஆடையைத் தரையில் (படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.  நூல்: புகாரி 5783

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்வத்தோடு தனது கீழாடையைத் தரையில் (படுமாறு) இழுத்துச் சென்றவனை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். நூல்: புகாரி 5788

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "யார் தனது ஆடையைப் பெருமையுடன் தரையில் படுமாறு இழுத்துக் கொண்டு செல்கிறாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லா விட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று சரிந்து விடுகிறது'' என்று சொன்னார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  "நீங்கள் தற்பெருமையுடன் அப்படி செய்பவரல்லர்'' என்று கூறினார்கள்.  நூல்: புகாரி 5784

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் தற்பெருமையுடன் கர்வத்துடன் கணுக் கால்களுக்குக் கீழ் அணிந்தால் தான் நரகம் என்று வருகிறது. இதுதான் சரியாகவும் இருக்கிறது. ஏனென்றால் சாதாரணமாக ஆடை தரையில் படுவதற்காக இந்தத் தண்டனை கொடுப்பது சரியில்லை. மாறாக பெருமையுடன் நடந்ததால் தான் இந்தத் தண்டனை கொடுப்பது தான் சரியாகும்.

சில அறிஞர்கள் வேறு விதமான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அதாவது கரண்டைக்குக் கீழ் ஆடை இறங்கி விட்டால் அது நரகத்திற்குரியது என்பதும், பெருமைக்காக ஆடை அணிந்து தரையில் படுமாறு சென்றால் அவர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் என்பதும் தனித்தனியான செய்திகள். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து பெருமைக்காகச் சென்றால் தான் இந்த எச்சரிக்கை என்று விளங்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான எச்சரிக்கைகள் இருக்கின்றன.  எனவே பெருமைக்காக இருந்தாலும் பெருமை இல்லாவிட்டாலும் கணுக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பொதுவாக ஹதீஸ் கலையின் விதியில், ஒரு செய்தி காரணம் இல்லாமலும் இன்னொரு செய்தி காரணத்தைக் குறிப்பிட்டும் வந்தால் காரணத்தோடு வந்திருக்கும் செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. இந்த விதியை அறியாத காரணத்தால் இப்படி விளக்கம் கூறி விடுகின்றனர்.

இந்த விதியை விளங்குவதற்காக, குர்ஆனில் சொல்லப்பட்ட ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். குர்ஆனில் அல் மாயிதா என்ற அத்தியாயத்தில் ஹராமாக்கப்பட்ட விஷயங்களைச் சொல்லும் போது இரத்தத்தையும் குறிப்பிடுகின்றான்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப் பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. அல் குர்ஆன் 5:3

இதே செய்தியை திருக்குர்ஆனில் அன்ஆம் என்ற அத்தியாயத்தில் இரத்தத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஓட்டப்பட்ட இரத்தம் என்று குறிப்பிடுகிறான்

"தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர்கள் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.  (அல்குர்ஆன் 6:145)

இங்கே நாம் எப்படி விளங்கிக் கொள்வோம்? ஓடக் கூடிய இரத்தம் தான் ஹராம்! ஓடாத இரத்தங்கள் ஹராம் இல்லை என்று விளங்குவோம். இதே போன்று தான் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கக் கூடிய செய்தி பொதுவாக இடம் பெற்றுள்ளது. மற்றொரு செய்தியில் பெருமைக்காக என்று வந்துள்ளது. எனவே காரணத்தோடு வந்திருக்கக் கூடிய  செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படித் தான் இந்த விஷயத்தில் இணைத்து முடிவு காண வேண்டும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரியிலும், இமாம் நவவீ அவர்கள் முஸ்லிம் விளக்கவுரையிலும் கூறியிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். ஆடையை பெருமைக்காக அணிவது குற்றம் என்றவுடன் இது வேட்டியை, கீழங்கியை மட்டும் குறிக்கும், மற்ற ஆடைக்குப் பொருந்தாது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக சட்டை, தலைப்பாகை இவைகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

"ஆடையைத் தொங்க விடுவது என்பது கீழங்கியிலும், சட்டையிலும், தலைப்பாகையிலும் இருக்கிறது. யார் இவைகளைப் பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்: அபூதாவூத் (3571)

இந்தச் செய்தி கீழங்கியை அணிபவருக்கு மட்டும் எச்சரிக்கை செய்யவில்லை. மாறாக தலைப் பாகையின் ஓரங்களைப் பெரிதாகத் தொங்க விடுவதையும், சட்டையில் ஜுப்பா என்ற பெயரில் முட்டுக் கால் வரை தொங்க விடுவதையும் எச்சரிக்கை செய்கிறது. சம்பந்தப் பட்டவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும்.

(குறிப்பு: இந்த ஹதீஸில் இடம் பெரும் அப்துல் அஜீஸ் என்பவரைப் பலர் குறை கூறியிருப்பதாக இமாம் முன்திரி அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இவருடைய விஷயத்தில் குறை கூறியவர்கள் இவர் கொண்டிருந்த கொள்கைக்காகத் தான் குறை கூறியுள்ளார்கள். கொள்கை ரீதியாக ஒருவரைக் குறை கூறுவதால் அவரது நம்பகத்தன்மையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.) 

5. எதுவரை உயர்த்தி கட்டலாம்?

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை கணுக்காலுக்குக் கீழ் இருந்தது. அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்! உனது கீழாடையை உயர்த்திக் கட்டு!'' என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். "இன்னும் உயர்த்திக் கட்டு'' என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் உயர்த்தினேன். பின்னர் நான் அதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். (இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், "எதுவரை உயர்த்த வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "கணுக்கால்களின் பாதியளவுக்கு'' என்று பதிலளித்தார்கள்.  நூல்: முஸ்லிம் 4238

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமினின் கீழங்கி கணுக்காலின் பாதியளவாகும். கணுக்காலுக்கும் கரண்டைக்கும் மத்தியில் இருந்தால் குற்றமில்லை.  கரண்டைக்கும் கீழாக இருந்தால் அது நரகத்திற்கு உரியதாகும். யார் பெருமையோடு ஆடையை இழுத்துச் செல்கிறாரோ அல்லாஹ் அவரை கியாம நாளில் பார்க்க மாட்டான். நூல்: அபூதாவூத் 3570

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அனைத்திலும் பொதுவாக ஆடைகளை கரண்டைக்குக் கீழ் அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. எனினும் பெண்களுக்கு என்று இதில் விதி விலக்கு இருக்கிறது. அதைக் கீழ்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

6. பெண்கள் கரண்டைக்குக் கீழ் அணியலாமா?

நபி (ஸல்) அவர்கள், "யார் தமது கீழாடையைப் பெருமைக்காகத் தரையில் படுமாறு இழுத்துச் செல்கிறாரோ அவரைக் கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்'' என்று கூறியவுடன் உம்மு ஸலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் தங்களுடைய கீழாடையை எப்படி அணிவது?'' என்று கேட்டார்கள். "ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்'' என்றார்கள். "அப்படியானால் அவர்களின் பாதங்கள் வெளிப்படுமே!'' என்று உம்மு ஸலமா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம்; அதை விட அதிகமாக்கக் கூடாது'' என்றார்கள்.  நூல்கள்: அபூதாவூத் 5241, திர்மிதி 1651

பெண்கள் கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவதை இந்தச் செய்தி அனுமதிக்கிறது. எனவே அவர்களுக்கு மேற்கூறப்பட்ட எச்சரிக்கை பொருந்தாது என்பதை விளங்கலாம்.

7. அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?'' எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)  நூல்: முஸ்லிம் 131

ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது "இவர் தனது ஆடையை தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: அபூதாவூத் 3540

அனுமதிக்கப்பட்ட ஆடைகளும் தடுக்கப்பட்ட ஆடைகளும்

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்று விட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர் கொண்டேன். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு ஜுப்பா அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய் கொப்பளித்து, நாசிக்குத் தண்ணீர் செலுத்தி விட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் சட்டைக் கையிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால் சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. ஆகவே தமது இரு கைகளையும் அவர்கள் ஜுப்பாவின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும் தலையையும், காலுறையையும் மஸஹ் செய்தார்கள்.  நூல்: புகாரி (5798)

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்கள், "உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம், இருக்கிறது'' என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவு நடந்தார்கள். பிறகு வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி ஜுப்பா  அணிந்திருந்தார்கள். இதனால் ஜுப்பாவிலிருந்து தமது முழங்கைகளை எடுக்க முடியவில்லை. ஆகவே அங்கியின் கீழிலிருந்து எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை மஸஹ் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், "அவற்றை விட்டு விடுவீராக! ஏனெனில் நான் கால்கள் இரண்டையும் தூய்மையான நிலையிலேயே நுழைத்திருந்தேன்'' என்று சொல்லி அவற்றைத் தடவி மஸஹ் செய்து கொண்டார்கள்.  நூல்: புகாரி (5799)

சால்வை ஆடை

"நபி (ஸல்) அவர்களிடம் புர்தா ஒன்றை ஒரு பெண்மணி கொண்டு வந்தார்'' என்று ஸஹ்ல் கூறி விட்டு, "புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். அங்கிருந்தோர், "ஆம், புர்தா என்பது சால்வை தானே'' என்றனர். ஸஹ்ல் ஆம் என்று கூறிவிட்டு, "மேலும் அப்பெண்மணி, "நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன்; இதனை உங்களுக்கு அணிவிக்கவே கொண்டு வந்தேன்' என்றதும், அது தேவையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்த போது ஒருவர், "இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை எனக்கு அணிவித்து விடுங்கள்'' என்று கேட்டார். அங்கிருந்தோர், "நீர் செய்தது சரியா? நபி (ஸல்) அவர்களுக்குத் தேவைப்பட்டதால் தான் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே'' எனக் கூறினார்கள் அதற்கவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அதை அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை. அது எனக்கு (இறந்த பின் போர்த்தும்) கஃபனாக ஆகி விட வேண்டும் என்றே கேட்டேன்'' என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாக ஆகி விட்டது'' என்று ஸஹ்ல் கூறினார்.  நூல்: புகாரி 1277

சட்டை, பேண்ட்

இப்னு உமர் (ரலி) கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளை இடுகிறீர்கள்?'' என்று ஒரு மனிதர் எழுந்து கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகையையும், தொப்பிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளை கரண்டைக்குக் கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக் கொள்ளட்டும். குங்குமப்பூ சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள். இஹ்ராம் அணிந்த பெண் முகத் திரையையும், கையுறைகளையும் அணியக் கூடாது'' என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி 1838

இந்த ஹதீஸிலிருந்து ஹஜ் காலம் அல்லாத மற்ற காலங்களில் சட்டை மற்றும் கால் சட்டைகள் அணிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஹஜ் உடைய காலங்களில் சட்டை அணியக் கூடாது என்பதற்குக் காரணம் அது தைக்கப்பட்ட ஆடையாக இருப்பதால் தான். தைக்கப்பட்ட ஆடைகளை ஹஜ் காலங்களில் அணியக் கூடாது.

வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை

நபி (ஸல்) அவர்களிடம் சில ஆடைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிற கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதை யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். மக்கள் பதில் கூறாமல் மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று சொல்ல அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டு வரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும் இந்த ஆடையை நீ (பழையதாக்கி) கிழித்து நைந்து போகச் செய்து விடு'' என்று கூறிவிட்டு, "உம்மு காலிதே! இது ஸனாஹ் (அழகாக) இருக்கிறது'' என்று சொன்னார்கள். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. நூல்: புகாரி 5823

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க சதுரமான கருப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) ஸலாம் கொடுத்தவுடன், "எனது இந்தக் கருப்புக் கம்பளி ஆடையை (எனக்கு அன்பளிப்பு அளித்த) அபூஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் சற்று முன்பு அது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பி விட்டது. அபூஜஹ்மின் மற்றொரு (சாதாரண) ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள். நூல்: புகாரி 5817

இந்த ஹதீஸிலிருந்து இது போன்ற தொழுகையின் கவனத்தை திருப்பக் கூடிய ஆடைகளை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆடைகளைத்  தொழுகை அல்லாத மற்ற நேரங்களில் பயன்படுத்தலாம் என்றும் அறிய முடிகின்றது.

அரைக்கை சட்டை

அரைக்கை சட்டை அணிந்து தொழுதால் மக்ரூஹ் என்று சில உலமாக்கள் கூறி வருவதைப் பார்க்கிறோம். இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. ஹதீஸை சரியாகப் படிக்காத அல்லது விளங்காத உலமாக்கள் தான் இப்படிச் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் கூறுவது உண்மைக்கு மாற்றமானது என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜூது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்கு இரு கைகளையும் விரித்து வைப்பார்கள்.  நூல்: புகாரி 390, 807, 3564

இந்த ஹதீஸில் அக்குள் தெரியும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து இது ஹராமோ, மக்ரூஹோ அல்ல என்பதை அறியலாம். எனவே அக்குள் தெரியும் அளவுக்கு ஆடை அணியலாம். ஆனால் தொழும் நிலையில் தோளில் துண்டு இல்லாமல் தொழக் கூடாது என்பதைப் பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தமது தோள்களில் எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம். நூல்: புகாரி 359

அரைக்கால் டவுசர்

நபி (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவது பற்றி ஒருவர் வினவினார். அப்போது, "உங்களில் எல்லோரும் இரு ஆடைகளை வைத்திருக்கிறார்களா?'' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் இது விஷயமாக வினவினார். அதற்கு, "உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். சிலர் எல்லா ஆடைகளும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு சட்டையும் அணிந்து தொழுதனர். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டை மேல் போர்வை அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து தொழுதனர். முழுக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து சிலர் தொழுதனர். சிலர் அரைக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து தொழுதனர். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள்.  நூல்: புகாரி 355

உயர் ரகமான ஆடை

சிலர் உயர் ரகமான ஆடை அணிவதை, பகட்டுக்குரியது; அவ்வாறு அணிவது கூடாது என்பது போல் பேசி வருகின்றனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாற்றமானது ஆகும்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?'' எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)  நூல்: முஸ்லிம் 131

"அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன மனிதரிடம் சென்றேன். அவர் எனக்கு விருந்து தரவில்லை. அவர் என்னிடம் வரும் போது அவரைப் போல் நானும் நடந்து கொள்ளலாமா?'' என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று சொல்லி விட்டு, நான் மட்டமான ஆடை அணிந்திருப்பதைப் பார்த்த நபியவர்கள், "உன்னிடம் வசதி இருக்கிறதா?'' எனக் கேட்டார்கள். ஆடு, ஒட்டகம் மற்றும் அனைத்து செல்வங்களையும் அல்லாஹ் எனக்குக் கொடுத்திருக்கிறான்'' என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்தச் செல்வம் உம் மீது தென்படட்டும்'' என்றார்கள். நூல்: திர்மிதி 1929

வசதி படைத்தவர்கள் உயர் ரகமான ஆடைகளை அணிவது தவறில்லை என்பதுடன் அது விரும்பத்தக்கது என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்கு அறிவிக்கின்றன.

பட்டாடை அணிதல்

"பட்டாடை அணிவதும்,  தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண் களுக்கு ஹலால் (அனுமதிக்கப் பட்டது) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி) நூல்: திர்மிதி 1642

"சாதாரண பட்டோ, அலங்காரப் பட்டோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் (காஃபிர்களாகிய) அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர் களான) நமக்கும் உரியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)  நூல்: புகாரி 5426

பட்டாடையின் மீது அமர்வதை நபியவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: ஹுதைபதுல்யமான்(ரலி)  நூல்: புகாரி 5837

நபி (ஸல்) அவர்கள் "இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: உமர் (ரலி)  நூல்: புகாரி 5830


இந்தச் செய்திகள் அனைத்தும் பட்டாடை அணிவது ஆண்களுக்கு ஹராம் என்று சொன்னாலும் பின்வரும் செய்திகள் சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர! (என்று கூறி) பெரு விரலை அடுத்துள்ள (சுட்டு விரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.  அறிவிப்பவர்: உமர் (ரலி)  நூல்: புகாரி 5828

இன்னும் சில நோய்களுக்காக பட்டாடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும் நபி ஸல் அவர்கள் நமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

"அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கு இருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.  அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 2919

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல்  பாதுகாக்க வேண்டும்.

ஆனால்  மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை  பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க  யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு  ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை”  அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு  தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக்  கொண்டிருப்பதினால்  தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14  ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல்  கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.