Saturday, January 5, 2013

அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்




லக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219 கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவின் PEW எனும் சமயம் மற்றும் பொதுவாழ்வு ஆய்வு மையம், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் மக்கள் தொகை 35 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2010இல் 1.6 மில்லியராக இருந்த இந்த எண்ணிக்கை, 2030இல் 2.2 மில்லியராக உயரலாம். (ஒரு மில்லியர் அல்லது பில்லியன் என்பது 100 கோடி ஆகும்.)
பியூ ஆய்வு மையத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. இது அரசியல் சார்பற்றது; மதப் பாகுபாடு பாராட்டாதது; பியூ அறக்கட்டளைதான் இதற்கு நிதியுதவி செய்துவருகிறது. இம்மையத்தின் மேலாளர்: Luis Lugo.



உலகமெங்கிலுமுள்ள பல்துறை அறிஞர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். 2010ஆம் ஆண்டின் ஆய்வு முடிவை முன்பே அறிவித்திருந்த இந்த மையம், இப்போது அடுத்த இரு தசாப்தங்களுக்கான ஆய்வின் எதிர்பார்ப்பு என்ன என்பதை வெளியிட்டுள்ளது.


அடுத்த இருபது ஆண்டுகளில்


எதிர்வரும் இரு தசாப்தங்களில் முஸ்லிம் அல்லாத மக்களின் சராசரி ஆண்டு வளர்ச்சி 0.7 விழுக்காடாக இருக்கும் நிலையில், முஸ்லிம் மக்களின் சராசரி வளர்ச்சி 1.5 விழுக்காடாக இருக்கும்.


2030ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை சுமார் 8.3 மில்லியராக (830 கோடி) இருக்கும் நிலையில், மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 26.4 விழுக்காடாக இருப்பர். 2010இல் உலக மக்கட்தொகை 6.9 மில்லியர் (690 கோடி) என்பதும் அதில் 23.4 விழுக்காடு முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.


இருப்பினும், முஸ்லிம் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 1990-2010 தசாப்தங்களில் 2.2 விழுக்காடாக இருந்தது; இது 2010-2030 ஆகிய தசாப்தங்களில் 1.5 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


5 தசாப்தங்களில் மக்கட்தொகை


ஆண்டு
1990
2000
2010
2020
2030
மற்றவர்கள் (மில்லியர்)
4.2
4.8
5.3
5.8
6.1
முஸ்லிம்கள் (மில்லியர்)
1.1 (19.9%)
1.3 (21.6%)
1.6 (23.4%)
1.9 (24.9%)
2.2 (26.4%)
                

 
கண்டங்கள் வாரியாக முஸ்லிம் மக்கட் தொகை

                                                             2010                                2030

கண்டங்கள்
முஸ்லிம் மக்கட்தொகை
உலக முஸ்லிம்களில் விழுக்காடு
முஸ்லிம் மக்கட்தொகை
உலக முஸ்லிம்களில் விழுக்காடு
உலகம்
161,93,14,000
100%
219,01,54,000
100%
ஆசியா & மத்திய தரைக்கடல் பகுதி
100,55,07,000
62.1%
129,56,25,000
59.2%
மத்திய கிழக்கு & வட ஆப்ரிக்கா
32,18,69,000
19.9%
43,94,53,000
20.1%
ஆப்ரிக்கா & தெற்கு பாலைவனம்
24,25,44,000
15.0%
38,59,39,000
17.6%
ஐரோப்பா
4,41,38,000
2.7%
5,82,09,000
2.7%
அமெரிக்கா
52,56,000
0.3%
1,09,27,000
0.5%

ஐரோப்பா


அடுத்த 20 ஆண்டுகளில், இந்தோனேசியாவைவிட பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கட்தொகை உயரும்.

எகிப்தைவிட நைஜீரியாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகும்.

ஐரோப்பாவில் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கை முஸ்லிம் மக்கட்தொகை நெருங்கிவிடலாம். 2010இல் 6 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 2030இல் 8.2 விழுக்காடாக உயர்வர். அதாவது ஐரோப்பிய முஸ்லிம்களின் எண்ணிக்கை (2010) 44.1 மில்லியனிலிருந்து (2030) 58.2 மில்லியனாக அதிகரிக்கும்.




நாடு
2010
(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
2030
(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
ஆஸ்திரியா
5.7%
9.3%
சுவிட்சர்லாந்து
4.9%
9.9%
பெல்ஜியம்
6%
10.2%
ஃபிரான்ஸ்
7.5%
10.3%
பிரிட்டன்
4.6%
8.2%


அதிகரித்த ஆயுள்


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெரும்பாலும் 15-29ஆக இருக்கிறது. பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. சுகாதாரம் மேம்பட்டுள்ளது. குழந்தை இறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. மனித ஆயுள் கூடியுள்ளது. இத்தியாதி காரணங்களால் முஸ்லிம் மக்கட்தொகை பெருகுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 40 முதல் 50 விழுக்காடு இருப்பர்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 7 முதல் 12 விழுக்காடு இருப்பர். நடுத்தர வயதினர் 1990இல் 19 விழுக்காடு; 2010இல் 24 விழுக்காடு; 2030இல் 30 விழுக்காடு இருப்பர்.

2030ஆம் ஆண்டில் உலகிலுள்ள ஒவ்வொரு 10 இளைஞர்களில் மூவர் முஸ்லிம்களாக இருப்பர். 15 முதல் 29 வயது வரையிலானவர்களில் 29.1 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர் என எதிர்பார்க்கலாம். இது 2010இல் 25.8 விழுக்காடாகவும் 1990இல் 20 விழுக்காடாகவும் இருந்தது.

2030இல் முஸ்லிம்களில் சன்னிகளே 87-90 விழுக்காடு இருப்பார்கள். ஷியா முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு.

உலக முஸ்லிம்களில் 74.1 விழுக்காட்டினர் 49 நாடுகளில் பெரும்பான்மையினராக (2010) வாழ்கின்றனர். முஸ்லிமல்லாதோர் பெரும்பான்மையாக உள்ள வளரும் நாடுகளில் 23.3 விழுக்காடு முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

முஸ்லிம்களில் 3 விழுக்காட்டினர், வளர்ந்த நாடுகளான ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் 47.8 விழுக்காடு இல்லத்தரசிகள் (15-49 வயதினர்) ஏதேனும் ஒரு குடும்பக் கட்டுப்பாடுச் சாதனம் பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளில் இது 63.3 விழுக்காடாக உள்ளது.

ஆசியா


ஆசிய நாடுகளில் 2030இல் 10 பேரில் 3 பேர் (27.3%) முஸ்லிம்களாக இருப்பார்கள். 2010இல் 24.8 விழுக்காடாக இது இருந்தது. சீனாவில் முஸ்லிம்கள் 2 விழுக்காடே இருந்தாலும், 2030இல் உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா 19ஆம் இடத்தில் இருக்கப்போகிறது.


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் முன்னணியில் இருப்பது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகள்தான். இந்தப் பிராந்தியத்தில் உள்ள 20 நாடுகளில் -இஸ்ரேலைத் தவிர- மொத்தத்தில் 50 விழுக்காடு முஸ்லிம்கள் 2030இல் இருப்பர்; 17 நாடுகளில் 75 விழுக்காட்டைவிடக் கூடுதலாக இருப்பர்.

பாலஸ்தீனத்தில் 2010இல் 17.7 விழுக்காடு முஸ்லிம்கள் இருந்தனர். இது 2030இல் 23.2 விழுக்காடாக -அதாவது 2.1 மில்லியனாக- உயர வாய்ப்பு உண்டு.

ஆப்ரிக்கா மற்றும் தெற்குப் பாலைவனப் பகுதிகளில் அடுத்த 20 ஆண்டுகளில் 38.59 கோடி (60%) முஸ்லிம்கள் இருப்பார்கள். ஐரோப்பாவில் மொத்த மக்கட் தொகையில் 10 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர்.

கொசோவா: 93.5%; அல்பேனியா: 83.2%; போஸ்னியா: 42.7%; மாசிடோனியா: 40.3%; பல்கேரியா: 15.7%; ரஷியா: 14.4%; ஜார்ஜியா: 11.5%; பிரான்ஸ்: 10.3%; பெல்ஜியம்: 10.2%.

அடுத்த 20 ஆண்டுகளில் கனடாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கலாம். அதாவது 9,40,000லிருந்து 20,70,000ஆக உயரக்கூடும். இது, மொத்த மக்கட்தொகையில் 6.6 விழுக்காடு ஆகும்.

     அல்லாஹ்வே மிகப் பெரியவன்!
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!                                                  

(நன்றி: ஆலூகா (அரபி) இணையதளம்)
http://www.alukah.net/World_Muslims/0/47000/#Comments
http://www.pewforum.org/global-muslim-population.aspx

No comments:

Post a Comment