Saturday, February 18, 2012

இனிய மார்க்கத்தை தழுவிய- Actress Queenie Padilla (ஹதிஜா)-


இனிய மார்க்கத்தை தழுவிய- Actress Queenie Padilla (ஹதிஜா)-




மானிடனுக்கு அவனது உள்ளத்தில் நேர்வழியை காட்டிட கால அவகாசம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. சமீபத்தில் பிலிப்பைன்ஸில் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா என்ற தாரகை தற்போது ஹதிஜாவாக தனது பெயரோடு தன்னையும் மாற்றிக் கொண்டு இனிய மார்க்கமான இஸ்லாத்திற்குள் ஐக்கியமாகியிருக்கிரார் - அல்ஹம்துலில்லாஹ்.

கோடிக்கணக்கான வருமானமும் உச்சம் போற்றும் புகழும் இவரைச் சுற்றி வந்து கொண்டிருக்கும்போதே அவைகளனைத்தையும் உதறிவிட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற மன நிம்மதி தரும் முடிவுக்கு வந்துள்ளது அவரை உற்று நோக்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜித்தா வந்திருந்த அவரிடம் காணொளிப் பேட்டியினை எடுத்திருக்கின்றனர். தனது கடந்த கால வாழ்வில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்து எறியப்பட்டு விட்டதாகவும், இனி வரும் காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்தப் பெண் சொல்லும் கட்சியைப் பாருங்கள்.

தன்னுடைய முடிவால் எதிர்ப்புகளும் பண இழப்பும் ஏற்படும் என்று நன்றாகத் தெரிந்தே இம்முடிவை எடுத்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய நாடு கிடையாது. கிறிஸ்த்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் குர்ஆனை விளங்கி அல்லாஹ்வின் தூதரின் போதனைகளை விளங்கியே இவர் தனது மார்க்கத்தை தேர்ந்தெடுத்தள்ளதை அறியலாம்.

இதோ சகோதரியின் பேட்டியை காணுங்கள், இறுகிய மனதையும் கலங்க வைக்கும் உணர்ச்சிபூர்வமான காணொளிகள். இளகிடும் நம் உள்ளம் இதனை முழுமையாக பார்த்து படிப்பினைபெற வேண்டிய காணொளிகள், குறிப்பாக தாய்மார்கள் பார்க்க வேண்டிய காணொளிகள்



(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!   குர்ஆன் 13:28


http://arabnews.com/lifestyle/islam/article544139.ece


எழுத்து : அதிரைநிருபர்

ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?


 


சென்னை: தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆசிரியையை கொலை செய்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீஸ் விசாரணையிலும், மாணவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், சேகரிக்கப்பட்ட தகவல் விவரமாவது:

வீட்டில் அதிக செல்லம்: மாணவனின் தந்தை, ஆந்திராவைச் சேர்ந்தவர். பல ஆண்டுக்கு முன் சென்னையில் குடியேறி விட்டார். அவருக்கு, மூன்று மகள்; ஒரு மகன். துறைமுகத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் உள்ளார். வசதியான குடும்பம். இரண்டு மகள்களுக்கு, திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஒரே மகன் என்பதால், அதிக செல்லம். இதுவரை அவனது தந்தை, மகனை அடித்ததே இல்லை. பள்ளிக்கு எப்போதும் கார் மற்றும் பைக்கில் தான் செல்வான். தினமும் பாக்கெட் மணியாக, 100 ரூபாயை தந்தை கொடுத்தனுப்புவார். தொழிலில் கிடைக்கும் விலைஉயர்ந்த மொபைல்போன், கேமரா போன்ற பொருட்களை, மகனுக்கு கொடுப்பார். அவன், மற்ற மாணவர்களிடம் அதை காட்டி, பெருமை பேசுவான். மாணவனுக்கு பள்ளியில் மட்டுமல்லாது, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவிலும், நண்பர்கள் அதிகம். வீட்டில் மாணவனுக்கு, தனியறையும் உண்டு. சகல வசதியுடன் வாழ்ந்த மாணவனுக்கு, படிப்பு மட்டும் கொஞ்சம் எட்டியே இருந்தது.
மூன்றாண்டுக்கு முன்பிருந்த பகை: ஒரே மகன், என்பதால் வீட்டில் அதிக செல்லத்துடன் வளர்க்கப்பட்டான். படிப்பு குறித்து, அவனது பெற்றோர் அதிக கவலை அடைந்தனர். பிளஸ் 2 முடித்துவிட்டால், அவனை வெளிநாட்டுக்குஅனுப்பி படிக்க வைக்க, தீர்மானித்து இருந்தனர். ஆனால், பள்ளியில் ஆசிரியர்களிடத்தில் மாணவனுக்கு தொடர்ந்து அவப்பெயரே ஏற்பட்டது. மாணவன் செய்யும் தவறுக்காக, வீட்டில் பெற்றோரை அழைத்து வரச் சொல்வதும், மாணவனோ, பெற்றோர் ஊரில் இல்லை என சொல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே பள்ளி முதல்வராக இருந்தவரிடம், ஆசிரியை புகார் தெரிவித்துள்ளார். ஆனால், மாணவனின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. புதிய முதல்வர் வந்ததும், மீண்டும் ஆசிரியை புகார் செய்துள்ளார்.

பெற்றோரிடம் புகார்: இது தொடர்பாக பெற்றோர் முகவரிக்கு, கடிதம் எழுதியும், மொபைலில் எஸ்.எம்.எஸ்., மூலமாகவும், ஆசிரியை புகார் அனுப்பியுள்ளார். மகன் சரியாகப் படிக்காமல், வேறு பாதையில் போவதை கண்ட பெற்றோர், மாணவனை அடித்ததோடு, தினமும் தரப்படும் பாக்கெட் மணியை, "கட்' செய்தனர். கார், பைக்கையும் திரும்ப வாங்கிக் கொண்டனர். பெற்றோரிடம் அடியும் வாங்கி, திட்டும் வாங்கியதோடு, அனுபவித்த வசதியும் போனதை நினைத்து, மாணவன் அவமானப்பட்டிருக்கிறான்.

கொலையைக் கற்றுக் கொடுத்த சினிமா: கொலை செய்யப்படுவதற்கு முன், "அக்னி பாத்' என்ற இந்திப் படத்தை, 30க்கும் மேற்பட்ட தடவை, மொபைலிலும், "சிடி'யிலும் பார்த்துள்ளான். அதில் வரும் கொலை காட்சியை கண்டு, ஆசிரியையின் மீதான வெறி அதிகமாகி, கொலை செய்யும் அளவுக்கு மாணவனை கொண்டு சென்றுள்ளது. சம்பவத்தன்று ஆசிரியை இந்தி பாடம் எடுக்க, வகுப்பறைக்கு சென்று விட்ட பிறகு, பாடம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன், மாணவனும் வகுப்பறைக்குச் சென்றுள்ளான். தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து, ஆசிரியையிடம் கோபமாக பேசியதோடு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளான். பெற்றோர், பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்தாலும் சரி, கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் சரி, தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து விடுகிறது.

தகவல்: Dinamalar

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்து பதினைந்து பேரைக் கொன்றுவி
ட்டு பின்னர் போலீசுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான்.விடலைப் பருவத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு சக மாணவர்களை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதைக் கேள்விப் பட்டிருப்போம்.
அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் துப்பாக்கிகள் இன்னமும் மலிவாகிவிடவில்லை என்றாலும் தனிநபரை முன்னிறுத்தும் அமெரிக்க பாணி வாழ்க்கைமுறை இங்கேயும் வளர்ந்து வருகிறது.
அப்படி மாறிய மாணவர்கள் சிலர் துப்பாக்கியுடன் செய்த வன்முறைகளை இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது. இன்றைய கல்வி, மொழிவாழ்க்கை, நுகர்வு பொருட்கள் அத்தனையும் மாணவர்களிடன் பொறுமையற்ற மனநிலையை உருவாக்குவதோடு, சமூக உணர்வை குன்றச் செய்வதையும் பார்க்கிறோம். ஆடம்பர வாழ்க்கை குறித்த நாட்டம், எப்படியும் முன்னேற வேண்டுமென்ற வெறி, சமூக மதிப்பீடுகளை மாற்றச் செய்யும் சுற்றுச்சூழல், எல்லாம் சேர்ந்து விடலைப்பருவத்தினரை சமூகத்திற்கு எதிரான பதட்டமுடைய தனிநபர்களாக மாற்றுகின்றது.
இந்தக் கட்டுரை நோயை மட்டும் ஆராயவில்லை. இந்த நோய்க்கு என்ன மருந்து அத்தியாவசியம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது. விடலைப் பருவத்தினரை எந்த அளவு சமூகமனிதர்களாக மாற்றுகிறோமோ அந்த அளவு அவர்களது வன்முறையை தணித்து நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும். புதிய கலாச்சாரத்தில் வந்த இக்கட்டுரையை காலப்பொருத்தம் கருதி இங்கே பதிவு செய்கிறோம்.
சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.
சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன் என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிக்கைகளில் பதிவானவை. மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் இல்லினாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப் பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீப காலமாகப் பரவித் தான் வருகிறது.
இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல; ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. மேற்கண்ட சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே போலீசும், பத்திரிக்கைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை. விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.
2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை  பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.
இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில் வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சினையில்லை என்று பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம்.  வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்கவேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம். அதற்குத் தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப் பையனும் இருக்கிறான் என்பதைப்  பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீனக் கருவிகள்; அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார், இருசக்கர வாகனங்கள், செல்பேசிகள், பீட்ஸா, பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள்
இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக  மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?

புதிய கலாச்சாரம், மார்ச்’08